“உஷார் !வாட்ஸ் அப்பில் வலம் வரும் அழகிகள்”- ஆசையாக பேசி ஆட்டைய போட்டு ..நிர்வாண வீடியோ மூலம் நிர்மூலமாக்குவார்கள்..

பெங்களூருவில் விட்ஃபீல்டில் வசிக்கும்26 வயது சைமன் ஒரு தனியார் நிறுவன பொறியாளர் .இவர் ஒரு வீட்டில் தனியாக வசித்துள்ளார் .கடந்த மாதம் ஒரு பெண் இவரிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு ,தான் கேரளாவை சேர்ந்த நிஷா என்றும் ,தான் ஒரு மென்பொறியாளர் என்றும் இவரிடம் அறிமுக படுத்திகொண்டு தினமும் பேசி வந்துள்ளார் .நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்களின் நட்பு வளர்ந்துள்ளது .

இதற்கிடையில் ,சென்ற வாரம் அந்த பெண் இவரிடம் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியுள்ளார் ,பிறகு அவரை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாகவும் ,அதனால் வீடியோ காலில் நிர்வாண போஸ் தரும்படியும் கூறியுள்ளார் .முதலில் அவர் அதற்கு தயங்கியதும் ,உடனே நிஷா நீங்கள் அப்படி நின்ற பிறகு தானும் நிர்வாண போஸ் கொடுப்பதாக கூறியதும் அவர் மயங்கி நிர்வாண போஸ் கொடுத்தார் .

பிறகு அவர்களின் லைன் கட்டாகியுள்ளது .அதற்கு பிறகு அவர் பலமுறை அந்த பெண்ணிடம் பேச முயன்று முடியாமல் போனது .
இந்நிலையில் இரண்டு நாளைக்கு முன்பு அவரின் நிர்வாண போட்டோவை அனுப்பி, ஒரு நபர் இவரிடம் பேரம் பேசியுள்ளார் ,உடனே 50000 ரூபாய் தரவில்லையெனில் அந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.உடனே பயந்து போன சைமன் 22000 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார் .பிறகு அந்த நபர் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் ,சைமன் உடனே இது நிஷாவின் வேலைதான் என தெரிந்துகொண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் தந்தார் .சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

Most Popular

“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .

ஒரு சிறுவன் தன்னுடைய தாயார் விளையாட பூனைக்குட்டி வாங்கி தராததால் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் தந்தை வெளிநாட்டிலிருப்பதால் ஒரு தாயும் 15 வயது சிறுவனும்...

‘பண்டிகை காலங்களைப் போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதத்தை போலவே, இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்...

பதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு...

“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .

'கான் இன் 60 விநாடிகள்'என்ற ஹாலிவுட் படம் பார்த்து, அதே ஸ்டைலில் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகளை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புது தில்லியில்...
Do NOT follow this link or you will be banned from the site!