Home க்ரைம் காதலனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர கணவனின் மூச்சை நிறுத்திய மனைவி

காதலனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர கணவனின் மூச்சை நிறுத்திய மனைவி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் வாசு. இவரின் மனைவி சொப்பனபிரியா. திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் சொப்பன பிரியாவுக்கும் மணிகண்டன் என்பவருக்கு நல்ல உறவு ஏற்பட்டு இருக்கிறது. இதை புரிந்து கொண்டு சொப்பன பிரியாவை கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

காதலனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர கணவனின் மூச்சை நிறுத்திய மனைவி

இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி அன்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய வாசு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்திருக்கிறார். சொப்பன பிரியாவிடம் சண்டை போடுவதற்காகவே அப்படி வந்திருக்கிறார். இனிமேல் மணிகண்டனுடன் உனக்கு தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தால் சும்மா விட மாட்டேன் என்று ஆவேசமாக சத்தம் போட்டு பேசியிருக்கிறார்.

பின்னர் போதை மயக்கத்தில் அவர் தூங்கிவிட்டார். இதை எடுத்து இரவு பதினொரு மணிக்கு மணிகண்டனுக்கு செல்போனில் பேசி, ஒன்று என்னை கொன்று விடு. இல்லை என் கணவனைக் கொன்று விடு என்று ஆத்திரமாய் கூறியிருக்கிறார் சொப்பன பிரியா.

உன்னை கொன்று விட்டால் எனக்கு என்ன பிரயோஜனம் இருக்கிறது. உன் கணவனை கொன்றால் எனக்கு பிரயோஜனம் இருக்கிறது என்று சொன்ன மணிகண்டன் உடனே பிரியா வீட்டுக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த வாசுவின் கழுத்தில் செல்போன் சார்ஜர் வயரை போட்டு இறுக்கி அவரை கொலை செய்து விட்டு தப்பித்து விட்டார்.

காதலனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர கணவனின் மூச்சை நிறுத்திய மனைவி

தன் கணவர் மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்லி நாடகமாடியதில் உறவினர்கள் நம்பியிருக்கின்றனர். ஆனாலும் அக்கம்பக்கத்தினரும் சந்தேகத்தின்பேரில் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் வாசுவின் கழுத்தை பிளாஸ்டிக் வைத்து அழுத்தியதில் கழுத்து எழும்புகள் முறிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிய வந்தது. இதை அடுத்து சொப்பனா பிரியா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக மூச்சை நிறுத்திய செயல் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காதலனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர கணவனின் மூச்சை நிறுத்திய மனைவி

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்!

நீண்ட இடைவெளிக்கு பின் திரையுலகில் மீண்டும் நடிக்கவிருக்கும் நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இம்சை அரசன் 23-ஆம்...

நானும் என் மகனும் இன்று சண்டை போடுவோம் நாளை கட்டிப்பிடிச்சுப்போம்- எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகரின் நான் கடவுள் இல்லை படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்,...

டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்- எம்.பி அதிரடி

மத்திய அரசு தனக்கு டெல்லியில் ஒதுக்கிய வீட்டை தமிழக மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
TopTamilNews