Home க்ரைம் `10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி... திடீர் இல்லற வாழ்க்கை... கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி!'- சேலத்தில் நடந்த பயங்கரம்

`10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி… திடீர் இல்லற வாழ்க்கை… கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி!’- சேலத்தில் நடந்த பயங்கரம்

10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி திடீரென ஒன்று சேர்ந்து இல்லற வாழ்க்கையை தொடங்கிய நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறால் அவரை அடித்துக்கொன்று வீட்டில் உள்ள கழிவறையில் குழிதோண்டி புதைத்துள்ளார் மனைவி. இந்த அதிர்ச்சி சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம், செஞ்சிக்கேட்டையை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு பவித்ரா என்ற மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து சென்று தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் சேர்ந்த வாழ்வதாக கூறி வந்துள்ளார் பூங்கொடி. அப்போது, மனைவியின் தந்திரம் தெரியாமல் அவருடன் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார் சேட்டு.

இதனிடையே, உறவினர் வீட்டு திருமணத்திற்காக பிள்ளைகளுடன் சேட்டும், பூங்கொடியும் வெளியூர் சென்றுள்ளனர். அப்போது மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பிள்ளைகளை உறவினர் வீட்டிலேயே அவர்கள் விட்டுவிட்டு சொந்த ஊராக செஞ்சிக்கோட்டைக்கு திரும்பியுள்ளனர். வீட்டிற்கும் வந்தும் இருவருக்கும் சண்டை முற்றியுள்ளது. ஆத்திரம் அடைந்த பூங்கொடி, கணவர் சேட்டை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, கணவனரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் குழிதோண்டி புதைத்துள்ளார். பின்னர் அந்த இடத்தில் விறகு கட்டையை அடுக்க வைத்ததோடு, துர்நாற்றம் வீசாமல் இருக்க பிளிச்சிங் பவுடரையும், மாட்டு சாணத்தையும் அடிக்கடி தெளித்து வந்துள்ளார் பூங்கொடி.

இதனிடையே, உறவினர் வீட்டில் இருந்து அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் மகள் பவித்ரா. அப்போது, தனது அம்மாவிடம், அப்பா எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது, அப்பா வெளியூருக்கு கட்டட வேலைக்கு சென்றிருப்பதாக கூறியுள்ளார் பூங்கொடி. இதே பதிலையும் உறவினர்களிடமும், ஊரில் உள்ளவர்களிடமும் கூறியுள்ளார். உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளார் பூங்கொடி. கடந்த 21ம் தேதி தனது உறவினரின் வீட்டிற்கு செல்வதாகவும் செலவுக்கு மகளிடம் பணம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இதனிடையே வீட்டின் பின்னால் உள்ள கழிவறையில் துர்நாற்றம் வீசியதால் பவித்ரா அந்த இடத்தை தோண்டியுள்ளார். ரத்த கறை இருந்ததால் தனது சித்தப்பாவிடம் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர், அந்த இடத்தை தோண்டியபோது, சேட்டு உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, சேட்டுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். தப்பியோடி பூங்கொடியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கணவனை கொன்று வீட்டிலேயே புதைத்த மனைவியின் செயலால் அந்த கிராமமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

சொன்ன மாதிரி முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க… பா.ஜ.க. கூட்டணியை எச்சரித்த தேஜஸ்வி

பீகாரில், தேர்தலில் வாக்குறுதி அளித்தப்படி, பதவியேற்ற முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க. இல்லையென்றால் போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைவோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தேஜஸ்வி...

காந்திஜி கூட காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னார்… நரோட்டம் மிஸ்ரா தாக்கு

காங்கிரஸை புதுப்பிக்க முடியாது, காந்திஜி கூட கட்சியை கலைக்க சொன்னார் என்று அந்த கட்சியை நரோட்டம் மிஸ்ரா விமர்சனம் செய்தார். பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த...

திருமணத்தில் 100 பேருக்கு மேல் இருந்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்… ராஜஸ்தான் அரசு அதிரடி

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் கூடினால் விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.25 ஆயிரமாக அம்மாநில அரசு அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவுவதை...

செலவினத்தை இறுக்கி பிடித்து நஷ்டத்தை குறைத்த ஸ்பைஸ்ஜெட்..

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.112 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது. விமான சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் விமான சேவை நிறுவனமான...
Do NOT follow this link or you will be banned from the site!