நாளைமுதல் 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம்: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!

 

நாளைமுதல் 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம்: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

நாளைமுதல் 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம்: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,

நாளைமுதல் 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம்: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!

  • 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வங்கிகளுக்கு செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
  • 21 மற்றும் 28-ஆம் தேதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பால் நிலையங்கள், அமரர் ஊர்திகள் தவிர மற்ற கடைகள் மற்றும் வாகனங்கள் எதற்கும் அனுமதியில்லை
  • அவசர மருத்துவ தேவைக்கு மட்டும் பிற வாகனங்கள் பயன்படுத்தப்படலாம் .
  • இ-பாஸ் வைத்திருப்பவர்கள் அதை பெரிய அளவில் நகல் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். போலி இ- பாஸ் வைத்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும்.
  • பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்து சென்று தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். அனுமதி சீட்டின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.