மதுரையில் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது… தளர்வு கிடைத்தது… கொரோனா குறையுமா?

 

மதுரையில் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது… தளர்வு கிடைத்தது… கொரோனா குறையுமா?

மதுரையில் இன்று முதல் வழக்கமான பொது முடக்கம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், கொரோனா குறையுமா என்று பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரையில் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது… தளர்வு கிடைத்தது… கொரோனா குறையுமா?இந்த நிலையில் நேற்று நள்ளிரவுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது. இன்னும் சில நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுக்க பொது ஊரடங்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனால்தான் மதுரைக்கு தனியாக அறிவிப்பு வெளியிடவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், தமிழக அரசு நீட்டிப்பு அறிவிப்பை வெளியிடவில்லை.

மதுரையில் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது… தளர்வு கிடைத்தது… கொரோனா குறையுமா?இதனால் இன்று முதல் வழக்கமான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் பொது மக்கள் வழக்கம் போல வெளியே சென்று வர முடியும். தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அறிகுறி இன்றி கொரோனா தொற்று உள்ள நபர்கள் சர்வ சாதாரணமாக வெளியில் நடமாட முடியும். இவர்கள் மூலமாக கொரோனாத் தொற்று மதுரையில் இன்னும் வேகம் எடுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சென்னையைப் போல மதுரையிலும் தினமும் ஆயிரக் கணக்கானோருக்கு கொரோனாத் தொற்று ஏற்படும் நிலை வராமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.