100 அடியை நெருங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

100 அடியை நெருங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95.10 அடியாக உயர்ந்துள்ளது.

100 அடியை நெருங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதைத் தொடர்ந்து இரு அணைகளிலிருந்தும் உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக தமிழக நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

100 அடியை நெருங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

அந்த வகையில் தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சுமார் 9 அடி அதிகரித்துள்ளது. நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியில் இருந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 58.67 டிஎம்சியாக உள்ள நிலையில் பாசனத்திற்காக 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.