பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

 

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களின் ஆதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது .

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது . இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 99. 1 அடியாக உள்ளது . அணைக்கு வினாடி 1754 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடியும் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி என மொத்தம் 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஈரோடு மாவட்டத்தின் கடந்த சில நாட்காளாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதை போல் நேற்று மழை பரவலாக மழை பெய்தது. பெரும்பள்ளம் பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை பெய்தது . இதேபோன்று பெருந்துறை 13 , சென்னிமலை 16 ,குண்டேரிபள்ளம் 8.2 , வரட்டுப்பள்ளம் 6.8 , சத்தியமங்கலம் 5 , மொடக்குறிச்சி 2 , தாளவாடியில் 1 மில்லி மீட்டர் மழை பெய்தது.