வாக்கு எண்ணிக்கை தள்ளிபோகிறதா? சத்யபிரதா சாகு அவசர ஆலோசனை!

 

வாக்கு எண்ணிக்கை தள்ளிபோகிறதா? சத்யபிரதா சாகு அவசர ஆலோசனை!

மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் இரவு 7 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 75 இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பதிவான 16 தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் 3 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.இதனிடையே மீண்டும் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெறுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை தள்ளிபோகிறதா? சத்யபிரதா சாகு அவசர ஆலோசனை!

இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். அதிகாரி, ஏஜெண்டுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யலாமா வேண்டாமா என்பது பற்றி ஆலோசனை நடக்கவுள்ளது. கொரனோ பரிசோதனை செய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதா என சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் முக்கிய ஆலோசனையாக இது பார்க்கப்படுகிறது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சத்யபிரதா சாகு, மே 2ஆம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.