ஈரோடு: வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்துக்கு இடம் மாறிய காய்கறி சந்தை!

 

ஈரோடு: வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்துக்கு இடம் மாறிய காய்கறி சந்தை!

ஈரோட்டில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் காய்கறி சந்தை இன்று முதல் செயல்பட ஆரம்பித்ததுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக சமூக இடைவெளி எவ்வளவு அவசியம், காற்றோட்டமாக விஸ்தாரமாக கடைகள், வீடுகள் அமைப்பது எவ்வளவு முக்கியத்துவம் என்று மக்கள் தற்போதுதான் கொஞ்சம் புரிய ஆரம்பித்துள்ளனர்.

ஈரோடு: வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்துக்கு இடம் மாறிய காய்கறி சந்தை!ஈரோடு கடைவீதியில் மிக நெரிசலான இடத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இந்த சந்தைக்கு வந்து செல்வது கொரோனாவுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால் பஸ் நிலையத்துக்கு காய்கறி சந்தை மாற்றப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் பஸ்கள் இயக்கப்படாத சூழலில் பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை செயல்படுவதில் சிக்கல் இல்லாமல் இருந்தது. பஸ்கள் இயக்கம் தொடங்கிய பிறகு காய்கறி சந்தை அங்கு இருப்பது மக்களுக்கும் பயணிகளுக்கும் அசௌகரியத்தை தந்தது.

ஈரோடு: வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்துக்கு இடம் மாறிய காய்கறி சந்தை!இதைத் தொடர்ந்து ஈரோட்டில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் காய்கறி கடைகள் அமைக்கும் பணி நடந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வ.உ.சி பூங்காவில் காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மிகவும் விஸ்தாரமான இடம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க இந்த இடம் வசதியாக உள்ளது என்று காய்கறி வாங்க வந்த பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.