மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது !

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது !

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், தங்களை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்று தீபக் மற்றும் தீபா மனு அளித்திருந்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது !

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப் பூர்வமான இல்லமாக மாற்றவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை நேரடி வாரிசுகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது !

இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்க 68 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்தது . சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 68 கோடி டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடி , வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக 32 கோடி ரூபாய் என 68 கோடி ரூபாயை அரசு செலுத்தியுள்ளது. ஒரு சதுர அடி 12,060 ரூபாய் என்ற அடிப்படையில் இந்த தொகையானது செலுத்தப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது !

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையாக ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியதால் வேதா நிலையம் அரசுடமையானது என்றும் வேதா நிலையத்திற்கு உரியவர்கள் இழப்பீட்டு தொகையை நகர உரிமையியல் நீதி மன்றத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ள தமிழக அரசு, இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகம் ஆக மாற்றுவது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.