உத்தர பிரதேச அரசு ரூ.5.50 லட்சம் கோடிக்கு பட்ஜெட்… காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் மாநிலம்

 

உத்தர பிரதேச அரசு ரூ.5.50 லட்சம் கோடிக்கு பட்ஜெட்… காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் மாநிலம்

உத்தர பிரதேசத்தில் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தர பிரதேச அரசு தட்டி சென்றது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 16ம் தேதியன்று கவர்னர் ஆனந்தி பென் படேலின் உரையுடன் தொடங்கியது. நேற்று சட்டப்பேரவையில் யோகி ஆதித்யநாத் அரசு 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை காகிதமில்லாத பட்ஜெட்டாக யோகி அரசு தாக்கல் செய்தது. இதனால் நம் நாட்டில் காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தர பிரதேசம் தட்டி சென்றது.

உத்தர பிரதேச அரசு ரூ.5.50 லட்சம் கோடிக்கு பட்ஜெட்… காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் மாநிலம்
உத்தர பிரதேச பட்ஜெட்

உத்தர பிரதேச சட்டப்பேரவையில் அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை லேப்டாப்பில் பார்த்து வாசித்தார். சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட்டை உரையை அவர் படித்தார். யோகி அரசு 2021-22ம் நிதியாண்டுக்கு ரூ.5.50 லட்சம் கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இது இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை (ரூ.5.12 லட்சம் கோடி) காட்டிலும் சுமார் ரூ.38 ஆயிரம் கோடி அதிகமாகும்.

உத்தர பிரதேச அரசு ரூ.5.50 லட்சம் கோடிக்கு பட்ஜெட்… காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் மாநிலம்
பட்ஜெட்டை வாசிக்கும் சுரேஷ் குமார் கண்ணா

உத்தர பிரதேச அரசு பட்ஜெட்டில், கங்கா எக்ஸ்பிரஸ்வேக்க ரூ.7,200 கோடியும், புர்வன்சால் எக்ஸ்பிரஸ்வேக்கு ரூ.870 கோடியும், பண்டல்காந்த் எக்ஸ்பிரஸ்வேக்கு ரூ.1,492 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்துக்கு ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மரியாடா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம் என்று பெயரிடப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சுய சார்பு ஆக்குவதும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியையும் உறுதி செய்வதே இலக்கு என்று நிதியமைச்சர் கன்னா தெரிவித்தார்.