சீனாவின் மிகவும் விரும்பப்படும் தேசம் அந்தஸ்தை திரும்ப பெற எந்த திட்டமும் இல்லை… மத்திய அரசு தகவல்

சீனாவின் மிகவும் விரும்பப்படும் தேசம் அந்தஸ்தை திரும்ப பெற எந்த திட்டமும் இல்லை… மத்திய அரசு தகவல்

சீனாவின் மிகவும் விரும்பப்படும் தேசம் அந்தஸ்தை திரும்ப பெற எந்த திட்டமும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை மோதல் போக்கு நிலவுகிறது. எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பதிலடி கொடுக்கும் வகையில், சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைக்கும் வகையில் சுயசார்பு திட்டத்தை மத்திய அரசு முன்னிலைப்படுத்தி வருகிறது.

சீனாவின் மிகவும் விரும்பப்படும் தேசம் அந்தஸ்தை திரும்ப பெற எந்த திட்டமும் இல்லை… மத்திய அரசு தகவல்
பியூஸ் கோயல்

இந்த சூழ்நிலையில், சீனாவுடான ஏற்றுமதி-இறக்குமதியை குறைக்கும் நோக்கில் சீனாவின் மிகவும் விரும்பப்படும் தேச அந்தஸ்தை நீக்கும் திட்டம் மத்திய அரசுக்கு உள்ளதா என நாடாளுமன்றத்தில் மத்திய அரசிடம் உறுப்பினர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் பதில் அளித்தார்.

சீனாவின் மிகவும் விரும்பப்படும் தேசம் அந்தஸ்தை திரும்ப பெற எந்த திட்டமும் இல்லை… மத்திய அரசு தகவல்
பாகிஸ்தான்

அப்போது பியூஸ் கோயல் கூறுகையில், இந்த நேரத்தில் அத்தகைய திட்டம் எதுவும் பரசீலிக்கப்படவில்லை என தெரிவித்தார். கிழக்கு லடாக் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு ராணுவத்தினரும் பேசி வரும் சூழ்நிலையில் மத்திய அமைச்சர் இந்த பதிலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானின் மிகவும் விரும்பப்படும் தேசம் அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது.