சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் நலம் விசாரி்த்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட பிஜப்பூர் டர்டிரம் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று நக்சல்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 30 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்.

சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அமித் ஷா

ராய்பூர் நாராயண சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த வீரர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுடன் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக நக்சல் தாக்குதலில் பலியான 14 வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அமித் ஷா அஞ்சலி தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
சிகிச்சை பெறும் வீரரிடம் நலம் விசாரிக்கும் அமித் ஷா

சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் பாதுகாப்பு படையினருடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா பேசுகையில், இந்த யுத்தம் பலவீனமடையக்கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இது நமது வீரர்களின் மன உறுதியை அப்படியே வெளிப்படுத்துகிறது என்பதை காட்டுகிறது என தெரிவித்தார். பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்குடா முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர்களையும் அமித் ஷா சந்தித்தார்.