‘முன்களப் பணியாளர்களுக்கு நன்றி’ தெரிவித்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

‘முன்களப் பணியாளர்களுக்கு நன்றி’ தெரிவித்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கிவிட்டது. அதன் படி, இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், 38 மாவட்டங்களிலும் தலா 5 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

‘முன்களப் பணியாளர்களுக்கு நன்றி’ தெரிவித்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இந்த நிலையில் சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, அவர் செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பு மருந்து மையத்திற்கும் , ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்திற்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார்.

‘முன்களப் பணியாளர்களுக்கு நன்றி’ தெரிவித்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு நன்றியும் கூறினார். மேலும், கொரோனாதொடங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்பு பணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது என்றும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.