வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை… மத்திய அரசு உத்தரவு

 

வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை… மத்திய அரசு உத்தரவு

2021 ஜூன் 1ம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கான தரத்தை உறுதிப்படுத்த இந்திய தர நிர்ணயக் கழகத்தின் (பி.ஐ.எஸ்.) ஹால்மார்க் முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தரத்தை உறுதி செய்யலாம். ஹால்மார்க்கிங் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று முன்பே உத்தரவிட்டது. ஆனால் தங்க நகை விற்பனையாளர்கள் இந்த நடைமுறைக்கு மாறாததால் இதற்கான காலக்கெடு பலமுறை நீடிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை… மத்திய அரசு உத்தரவு
ஹால்மார்க் நகை

நுகர்வோர் விவகார துறை செயலாளர் லீனா நந்தன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே பலமுறை போடப்பட்டது. தற்போது மறுபடியும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் திட்டத்தை செயல்படுத்துவதில் பி.ஐ.எஸ். ஏற்கனவே முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.

வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை… மத்திய அரசு உத்தரவு
தங்க நகைகள்

ஹால்மார்க்கிங் செய்ய நகை விற்பனையாளர்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பி.ஐ.எஸ். (இந்திய தர நிர்ணய கழகம்) தீவிரமாக பணியாற்றி வருகிறது. எனவே 2021 ஜூன் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைபொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரை இடுவது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.