விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்த பா.ஜ.க. அரசு… இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை

 

விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்த பா.ஜ.க. அரசு… இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து, இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்கு அழைப்ப விடுத்த பிறகு, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த மாதம் 13ம் தேதியன்று எங்களது கடைசி சந்திப்பின்போது, டிசம்பர் 3ம் தேதியன்று அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவு செய்தோம். இருப்பினும், விவசாயிகள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்தனர். கோவிட்-19 நிலவரம் கடும் குளிர் அலை ஆகியவற்றால் டிசம்பர் 3ம் தேதிக்கு முன்னர் பேச வேண்டும் என்று முடிவு செய்தோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்த பா.ஜ.க. அரசு… இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை
நரேந்திர சிங் தோமர்

தலைநகரில் விஜியன் பவனில் இன்று மதியம் 3 மணிக்கு சந்திப்பு நடைபெறுகிறது. வேளாண் சீர்திருத்தங்கள் தொடர்பான புதிய விளக்ககாட்சிகள் மற்றும் வீடியோக்களை விவசாய அமைச்சகம் தயாரித்துள்ளது. இந்த சந்திப்பில் பங்கேற்க நிதி ஆயோக்கிலிருந்து ஒரு சில பொருளாதார நிபுணர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்த பா.ஜ.க. அரசு… இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை
விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசுடன் இன்று நடைபெற உள்ள சந்திப்பு குறித்து விவசாயிகளின் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் தலைவர்களில் ஒருவரான ஸ்வராஜ் இந்தியாவின் யோகேந்திர யாதவ் கூறுகையில், நாங்கள் விவாதங்களுக்கு எங்கள் கதவுகளை மூடவில்லை. பேச்சுக்கள் எந்த நிபந்தனையுமின்றி, நேர்மையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இடது அல்லது வலது பக்கம் செல்வதில் எங்களுக்கு விருப்பமில்லை. இந்த சட்டங்களை ரத்து செய்ய சொல்கிறோம். குறைந்தபட்சம் சட்டங்களை மறுபரிசீலனை செய்வோம் என்று அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.