ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இருவர் – கடைசி ஓவர் வரை த்ரில்

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இருவர் – கடைசி ஓவர் வரை த்ரில்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேனா  மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. அதனால், நேற்று நடந்த போட்டியின் வெற்றி தொடரையும் வெல்லவுதான் என்பதால் போட்டியில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இருவர் – கடைசி ஓவர் வரை த்ரில்

போட்டியில் டாஸ் வின் பண்ணிய இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் என முடிவெடுத்தார். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஜாஸன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இறங்கினார்கள்.

இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மிட்செல் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட ஜாஸன் ராய், மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து இறங்கிய கோ ரூட் டும் டக் அவுட்டானார்.

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இருவர் – கடைசி ஓவர் வரை த்ரில்

கேப்டன் மோர்கன் 28 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடம் ஸாம்பா பந்தில் மிட்சேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இருவர் – கடைசி ஓவர் வரை த்ரில்

ஜானி பேர்ஸ்டோ நிலைத்து ஆடி, 126 பந்துகளில் 112 ரன்களைக் குவித்தார். அதேபோல சாம் பில்லிங்ஸ் 58 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். யாரும் எதிர்பாராத வண்ணமாக கிறிஸ் வோக்ஸ் 39 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். அதில் 6 ஃபோர்கள் அடக்கம்.  டாம் குரன், ரஷித் ஆகியோரின் ஆட்டத்தால் 302 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து அணி. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்த நிலையில் 250 ரன்களைத் தொடவே வாய்ப்பில்லை என்று நிலையில் 302 ரன்கள் எனும் பெரும் ஸ்கோரை அடைந்தது வியப்பே.

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இருவர் – கடைசி ஓவர் வரை த்ரில்

ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஸாம்பா 10 ஓவர்களில் 51 ரன்களை வாரிக்கொடுத்தாலும் 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேலோ மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்களில் 74 ரன்களை அள்ளிக்கொடுத்தார். ஆனாலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டி20 தொடரை இழந்த ஆஸ்திரேலியா இந்தத் தொடரை வென்றே ஆக வேண்டும் என்ற நினைப்போடு பேட்டிங்கில் களம் இறங்கியது. தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஐந்து வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டேவிட் வார்னர் 24, ஆரோன் பின்ச் 12, மார்கஸ் ஸ்டோய்ன்ஸ் 4, மிட்செல் மார்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இருவர் – கடைசி ஓவர் வரை த்ரில்

மேட்ச் ஆஸ்திரேலியாவிடமிருந்து நழுவி சென்றுவிட்டது என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால், அப்போது ஒரு மேஜிக் நிகழ்ந்தது.

அலெக்ஸ் கேரியும் மேக்ஸ்வெல்லும் திறமையான பேட்டிங்கால் அற்புதமான பார்ட்னர் ஷிப் போட்டனர். கேரி 114 பந்துகளில் 106 ரன்களும், மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 90 பந்துகளில் 108 ரன்களும் குவித்தனர்.

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இருவர் – கடைசி ஓவர் வரை த்ரில்

இருவருமே ஆடி வெற்றி இலக்கை கடந்துவிடுவார்கள் என நினைத்த நேரத்தில் ஆஸ்திரேலியா 285 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் அவுட்டானார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி கிடைக்குமா என்பதில் சந்தேகம் வந்தது. கேரி இருப்பதால் நிச்சயம் அவர் அடித்துவிடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. 293 ரன்கள் இருக்கும் நிலையில் அலெக்ஸ் கேரியும் அவுட்டானர்.

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இருவர் – கடைசி ஓவர் வரை த்ரில்

மேட்ச் பரபரப்பானது. ஆனாலும் மிட்சேல் ஸ்டார்க் 3 பந்துகளில் 11 ரன்களை விளாசி ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்து வந்துவிட்டார்.

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த இருவர் – கடைசி ஓவர் வரை த்ரில்

ஆஸ்திரேலியா தோற்றுவிடும் என நினைத்து மேட்சை மேஸ்வெல்லும் கேரியும் தங்கள் தோளில் சுமந்து வெற்றி பெற வைத்தார்கள். மேக்ஸ்வெல் மேன் ஆஃப் த மேட்ச் மற்றும் மேன் ஆஃப் த சீரியஸும் பெற்றார். ஆஸ்திரேலியா நேற்றைய வெற்றியின் மூலம் தொடரையும் கைப்பற்றியிருக்கிறது.