அரசு விழாவில் அமைச்சர் மீது புகார் மனு… தொழிற்சங்கத்தினரால் பரபரப்பு…

 

அரசு விழாவில் அமைச்சர் மீது புகார் மனு… தொழிற்சங்கத்தினரால் பரபரப்பு…

திருப்பத்தூர்

ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்க மறுத்து வருவதாக அமைச்சர் நிலோபர் கபில் மீது, அமைச்சர் கே.சி.வீரமணியிடம் தொழிற்சங்க கூட்டமைப்பினர் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கு திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு அரங்கை திறந்து வைத்தார். அப்போது, திருப்பத்தூர் மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

அரசு விழாவில் அமைச்சர் மீது புகார் மனு… தொழிற்சங்கத்தினரால் பரபரப்பு…

அந்த மனுவில், தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்க வேண்டிய 2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் மற்றும் இயற்கையாகவும், விபத்துக்களிலும் உயிரிழந்த உறுப்பினர்களுக்கு விண்ணப்பித்தும் நிவாரண தொகை உள்ளிட்டவற்றை வழங்காமல் அமைச்சர் நிலோபர் கபீல் காலம்தாழ்த்தி வருவதாக தெரிவித்திருந்தனர்.மேலும், புதிதாக 20 ஆயிரம் ஆன்லைன் பதிவு விண்ணப்பங்கள் மற்றும் பத்தாயிரம் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு, தொழிலாளர் வாரிய கார்டு வழங்காததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், அமைச்சர் நிலோபர் கபீல் ஒரு சாராருக்கு சார்பாக செயல்படுவதாக புகார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததாகவும், விரைவில் அவர் முடிவை அறிவிக்காவிட்டால் தொழிலாளர் நல அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.