மாணவனுடன் ஓடிய ஆசிரியை…ஆன்லைன் வகுப்பில் மலர்ந்த காதல்!

 

மாணவனுடன் ஓடிய ஆசிரியை…ஆன்லைன் வகுப்பில் மலர்ந்த காதல்!

ஆசிரியை ஒருவர் 12 ஆம் வகுப்பு மாணவனுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஹரியானாவின் பானிபட் நகரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் காணாமல் போனதாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரில் 17 வயதான தங்கள் மகள் தேஸ்ராஜ் காலனியில் உள்ள ஆசிரியரின் வீட்டில் தினமும் 4 மணி நேரம் பாடம் கற்றுக்கொள்ள செல்வான் . வழக்கம்போல் ஆசிரியை வீட்டுக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை , அங்கு சென்று பார்த்தபோது ஆசிரியையும் அங்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

மாணவனுடன் ஓடிய ஆசிரியை…ஆன்லைன் வகுப்பில் மலர்ந்த காதல்!

கணவரை பிரிந்து வாழும் ஆசிரியை பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். ஆசிரியை காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் முதலில் கூறவில்லை என்று தெரிகிறது. போலீசாரின் விசாரணைக்கு பிறகு மாணவன் காணாமல் போன அன்று ஆசிரியையும் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவனுடன் ஓடிய ஆசிரியை…ஆன்லைன் வகுப்பில் மலர்ந்த காதல்!

வீட்டை விட்டு சென்ற அவர்கள் இருவரும் பணம் , நகை எதுவும் எடுத்துச் செல்லவில்லை என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். அதே சமயம் அவர்களின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருக்கும் இடம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.