நீதிமன்றம் உத்தரவுக்கு முன்பாகவே தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும்! – புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து

 

நீதிமன்றம் உத்தரவுக்கு முன்பாகவே தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும்! – புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு முன்பாகவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவுக்கு முன்பாகவே தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும்! – புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்துகாரைக்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வந்தார். அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது. “சாத்தான்குளத்தில் அப்பா, மகன் விசாரணையின் பேரில் காவல் நிலையத்தில் மரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றிய தகவல் தமிழகம் பரவியது. தமிழகம் முழுவதும் மக்கள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீதிமன்றம் உத்தரவுக்கு முன்பாகவே தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும்! – புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்துஇதனால் குற்றவாளிகள் மீது தாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாத்தான் குளம் சம்பவம் தொடர்பான எதிர்ப்பு வலுப்பெற்றிருக்கும்போதே அல்லது நீதிமன்ற உத்தரவு முன்னதாகவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நீதிமன்றம் உத்தரவுக்கு முன்பாகவே தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும்! – புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்துகாரைக்கால் மாவட்டத்தில் தற்போது 27 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. கொரோனா தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 முறை வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். காரைக்காலில் உள்ள 2 லட்சம் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளை திருவாரூருக்கு அனுப்பி, பெற வேண்டியிருப்பதால் முடிவுகள் தெரிய தாமதம் ஏற்பட்டது. தற்போது, காரைக்கால் பகுதியிலேயே கொரோனா தொற்று பரிசோதனை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கி முடிக்கப்படும். காரைக்காலில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.