15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி..!

 

15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி..!

தமிழகத்தில் பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி..!

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி..!

இதில் மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் லிங்கேஷ், பட்டுப்பூச்சி வளர்ப்பு குடோனில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மேல்நகர் மதுரா தேவாங்குபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், மின்கம்பி பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி உள்ளிட்ட 15 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.