25 அடி உயரத்தில் அமெரிக்காவில் மிகவும் உயரமான அனுமன் சிலை!

 

25 அடி உயரத்தில் அமெரிக்காவில் மிகவும் உயரமான அனுமன் சிலை!

அமெரிக்காவின் ஹாக்கிசன் மாகாணத்திலுள்ள டேலவேர் பகுதியில் 1996ஆம் ஆண்டு கட்டப்பட்ட அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இதில் உள்ள அனுமன் சிலையை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி தெலுங்கானாவின் வாரங்கால் பகுதியில் உள்ள சிற்ப கலைஞரிடம் சுமார் 25 அடி உயரமுள்ள அனுமன் சிலையை தயாரித்துத் தருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

25 அடி உயரத்தில் அமெரிக்காவில் மிகவும் உயரமான அனுமன் சிலை!

அதன்படி ஓராண்டு உழைப்பின் பயனால் பிரம்மாண்ட அனுமன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கருப்பு நிற கிரானைட் கல்லால் தயாரிக்கப்பட்ட இந்த அனுமன் சிலை தெலுங்கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படுவதற்கும், தயாரிப்பதற்கும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் செலவானது.

25 அடி உயரத்தில் அமெரிக்காவில் மிகவும் உயரமான அனுமன் சிலை!

இந்த அனுமன் சிலையை நிறுவும் போது சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டனர்.

மிக உயரமான சிலைகளில் நியூ கேசில் உள்ள Our Lady Queen of Peace சிலையே முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் இந்த பிரம்மாண்ட அனுமன் சிலையே இந்து சிலைகளில் மிகவும் அதிக உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.