ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம் – சென்னை உயர்நீதிமன்றம் !

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம்  – சென்னை உயர்நீதிமன்றம் !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகிய ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களாக ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். அவரின் சொத்துக்களை நிர்வகிக்க தங்களுக்கு அனுமதி அளிக்க கோரினர்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம்  – சென்னை உயர்நீதிமன்றம் !

மேலும் வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம்  – சென்னை உயர்நீதிமன்றம் !

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காணொலி காட்சி மூலம் வழங்கப்பட்டது. அதில் , வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றிக்கொள்ளவும், அதை முதல்வரின் அலுவலகமாக மாற்றவும்  உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.  ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு என்று கூறியுள்ள நீதிமன்றம் அவர்களை சொத்துக்களின் 2ஆம் நிலை வாரிசுகளாக அறிவித்துள்ளது. மேலும் பரிந்துரை குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.