அம்பானி குடும்பத்துக்கான இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெறக்கோரிய மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம்

அம்பானி குடும்பத்துக்கான இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெறக்கோரிய மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம்

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெறக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெறக்கோரி கடந்த ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2019 டிசம்பரில் மும்பை நீதிமன்றம் இந்த வழங்கிய தீர்ப்பில், தங்கள் சொந்த கடுமையான அச்சுறுத்தல் கருத்துக்களை கருத்தில் கொண்டு தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக முழு செலவையும் ஏற்கத் தயாராக இருக்கும் நபர்களுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது.

அம்பானி குடும்பத்துக்கான இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெறக்கோரிய மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம்
முகேஷ் அம்பானி குடும்பம்

தங்கள் சொந்த கடுமையான அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு அம்பானி குடும்பத்தினர் தங்கள் உயிரை பாதுகாப்பதற்காக முழுச் செலவையும் ஏற்க தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஹிமான்சு அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அம்பானி குடும்பத்துக்கான இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெறக்கோரிய மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் புஷன் தலைமையிலான அமர்வு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெறக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் தனிநபரின் அச்சுறுத்தல் கருத்தை மதிப்பிடுவது மற்றும் மறுஆய்வு செய்வது மற்றும் இது போன்ற பிரச்சினைகளுக்கு அரசுதான் முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.