மக்களுக்கு அனுமதி கிடையாது… பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி… இன்று தொடங்கும் ரத யாத்திரை

 

மக்களுக்கு அனுமதி கிடையாது… பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…  இன்று தொடங்கும் ரத யாத்திரை

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ள பிரபல வைணவ தலம் பூரி ஜெகந்நாதர் கோயிலின் ரதயாத்திரை இன்று முதல் (23ம் தேதி) தொடங்குகிறது. இருப்பினும் முன்னதாக, அந்த கோயில் ரதயாத்திரைக்கு அனுமதி கொடுத்தால் தொற்று நோயான கொரோனா வைரஸ் பேரழிவு பரவலை ஏற்படுத்தும். அதனால் இந்த ஆண்டு ரதயாத்திரைக்கு தடை அல்ல ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு அமைப்பு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு தடை விதித்தது.

மக்களுக்கு அனுமதி கிடையாது… பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…  இன்று தொடங்கும் ரத யாத்திரைஇதனையடுத்து, பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை ஒராண்டு நிறுத்தினால் அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரத யாத்திரை நடத்த முடியாது என்பதால் ரதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிமன்றம், கடந்த 18ம் தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

மக்களுக்கு அனுமதி கிடையாது… பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…  இன்று தொடங்கும் ரத யாத்திரைபொதுமக்களுக்கு அனுமதி கிடையாது, ஒவ்வொரு தேரையும் 500க்கு பேருக்கு மேல் இழுக்க கூடாது அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து பூரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் ரதயாத்திரைக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியது. ரதயாத்திரையை மக்கள் வீடுகளிலிருந்து பார்க்கும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான நடவடிக்கையை அம்மாநில அரசு மேற்கொண்டது. மேலும் மக்கள் வருவதை தடுக்க நேற்று இரவு 9 மணி முதல் நாளை வரை பூரி மாவட்டத்தில் முழு ஷட் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பூரிக்கு பஸ்கள் மற்றும் ரயில்கள் செல்லாது.