முகக் கவசமே கொரோனா பரவலை பெருமளவில் தடுக்கிறது – ஆய்வில் ஆச்சர்ய தகவல்

 

முகக் கவசமே கொரோனா பரவலை பெருமளவில் தடுக்கிறது – ஆய்வில் ஆச்சர்ய தகவல்

ரோம்: முகக் கவசம் அணிவதால் கொரோனா பரவலை பெருமளவில் தடுக்க முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 4 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 77 லட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 39 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 18-வது இடத்திற்கு சென்று விட்டது.

முகக் கவசமே கொரோனா பரவலை பெருமளவில் தடுக்கிறது – ஆய்வில் ஆச்சர்ய தகவல்

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. இந்நிலையில், முகக் கவசம் அணிவதால் கொரோனா பரவலை பெருமளவில் தடுக்க முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி நடத்திய ஆய்வில் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு பயங்கரமாக பரவிய வடக்கு இத்தாலி மற்றும் நியூயார்க் நகரில் முககவசம் அணியும் விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டதன் விளைவாகவே கொரோனா நோய்த்தொற்று அந்த பகுதிகளில் பெருமளவில் குறையத் தொடங்கியுள்ளது.