துப்பாக்கியை தொண்டைக்குழியில் அழுத்தி செல்பி எடுத்த இளம்பெண்னுக்கு நேர்ந்த கதி

 

துப்பாக்கியை தொண்டைக்குழியில் அழுத்தி செல்பி எடுத்த இளம்பெண்னுக்கு நேர்ந்த கதி

செல்பி மோகத்தால் உலகம் முழுவதும் எத்தனையோ உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் மக்களிடையே இன்னமும் செல்பி மோகம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

துப்பாக்கியை தொண்டைக்குழியில் அழுத்தி செல்பி எடுத்த இளம்பெண்னுக்கு நேர்ந்த கதி

மலை உச்சியில் நின்று செல்பி எடுத்து கீழே விழுந்து, மொட்டை மாடியில் நின்று செல்பி எடுத்து கீழே விழுந்து, யானைக்கு அருகே நின்று செல்பி எடுத்து மிதிபட்டும் அலையில் நின்று செல்பி எடுத்து சிக்கி உயிர் இழந்து போயிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மொட்டை மாடியில் நின்று மின்னலை செல்பி எடுக்க முயன்ற சிறுவர்கள் பரிதாபமாக அண்மையில் உயிரிழந்தார்கள். அப்படி இருந்தும் இன்னமும் இந்த செல்பி மோகம் குறைந்தபாடில்லை.

செல்பி விபரிதத்தால் இருபது வயது இளம்பெண் ஒருவர் தற்போது உயிரிழந்திருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹர்டா பகுதியில் வசித்து வரும் அந்த 20 வயது இளம் பெண் தனது மாமியாரின் துப்பாக்கியை எடுத்து தன்னைச் சுட்டுக் கொல்வதுபோல் செல்பி எடுத்து இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அப்பெண் உயிரிழந்திருக்கிறார்.

துப்பாக்கியை தொண்டைக்குழியில் அழுத்தி செல்பி எடுத்த இளம்பெண்னுக்கு நேர்ந்த கதி

உயிரிழப்பதற்கு முன்பு துப்பாக்கியை தொண்டைக்குழியில் அழுத்து செல்பி எடுக்க முயன்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மாமியார் வீட்டார் போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இதையடுத்து போலீசார் செல்பியால் ஏற்பட்ட விபரீதம் என்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அப்பெண்ணின் பெற்றோர் இது செல்பியால் ஏற்பட்ட விபரீதம் அல்ல. வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்த மரணம். வரதட்சனை கொடுமையால் தான் எங்கள் பெண்ணை கொன்றுவிட்டு இப்படி நாடகமாடுகிறார்கள் என்று பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள்.