நீட் தேர்வுக்கு கட்டாயப்படுத்திய தாய்க்கு நேர்ந்த கதி -கராத்தே பெல்டால் கழுத்தை நெரித்து கொன்ற மகள்

 

நீட் தேர்வுக்கு கட்டாயப்படுத்திய தாய்க்கு நேர்ந்த கதி -கராத்தே பெல்டால் கழுத்தை நெரித்து கொன்ற மகள்

டாக்டருக்கு படிக்க விருப்பம் இல்லாத மகளை நீட் தேர்வுக்கு தயாராக சொல்லி கட்டாயப்படுத்தியதால் கராத்தே பெல்ட்டால் கழுத்தை நெரித்து தாயை கொலை செய்த மகளின் செயல் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீட் தேர்வுக்கு கட்டாயப்படுத்திய தாய்க்கு நேர்ந்த கதி -கராத்தே பெல்டால் கழுத்தை நெரித்து கொன்ற மகள்

மும்பையில் நவி மும்பை ஐரோலி செக்டார் -7 பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த தம்பதியினர் தங்களின் மகளை டாக்டருக்கு படிக்க வைத்துவிட வேண்டும் என்று பெரும் கனவில் இருந்தனர். ஆனால் மகளுக்கோ துளிகூட டாக்டருக்கு படிப்பதில் விருப்பம் இல்லை. வலுக்கட்டாயமாக மகளை அழைத்துக் கொண்டுபோய் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டனர்.

நீட் தேர்வில் படிப்பில் கவனம் செலுத்தாமல் கடந்த 27 ஆம் தேதி அன்று செல்போனிலேயே நாள் முழுவதும் மூழ்கிக் கிடந்திருக்கிறார் அந்தச் சிறுமி. இதை கண்ட பெற்றோர் மகளை திட்டி இருக்கின்றனர். தந்தை கடுமையாக திட்டி இருக்கிறார். இதனால் சிறுமி கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார். தாயார் சென்று அவனை சமாதானப்படுத்திய போது சிறுமி கேட்கவில்லை. மேலும் தந்தையின் மீது பல புகார்களை கொடுக்கப் போகிறேன் என்று மிரட்டியிருக்கிறார்.

இதனால் சிறுமியை சிறுமியை அழைத்துக் கொண்டு போலீஸ் சென்றிருக்கிறார் தாய். நடந்தவற்றையெல்லாம் சொன்னபோது தந்தையையும் வரவழைத்து போலீசார் சிறுமிக்கும் பெற்றோருக்கும் கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.

நீட் தேர்வுக்கு கட்டாயப்படுத்திய தாய்க்கு நேர்ந்த கதி -கராத்தே பெல்டால் கழுத்தை நெரித்து கொன்ற மகள்

பெற்றோர்கள் எப்படியாவது நீட் தேர்வுக்கு தயாராக வைத்துவிடவேண்டும் தங்கள் மகளை என்று விடாப்பிடியாக இருந்து உள்ளனர். ஆனால் அதில் பெற்றோர்கள் சொல்கிறார்களே என்பதற்காக கொஞ்சம் கூட அதில் ஆர்வம் காட்டாமல் இருந்து இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி அன்று மனைவியின் செல்போனிலிருந்து கணவனுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதை பார்த்த போது அதிர்ந்து போய்விட்டார். ’நான் விடை பெறுகிறேன்’ என்று அது இருந்திருக்கிறது. இந்த மெசேஜ் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கையில், மகள் போன் செய்திருக்கிறார். எடுத்து பேசியபோது, என்ன நடந்தது என்று தெரியவில்லை. அம்மா அறைக்குள் இருந்து கொண்டு கதவை திறக்க மறுக்கிறார். நான் வெகு நேரமாக கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

தன் மனைவி தற்கொலை செய்து கொள்ள இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டவர், தன் வீட்டின் அருகிலிருந்த உறவினர்களுக்கு போன் செய்து நான் வேலையில் இருக்கிறேன். வந்துவிடுகிறேன். நீங்கள் உடனே சென்று என்ன நடக்கிறது என்று பாருங்கள் என் மனைவியை காப்பாற்றுங்கள் என்று புலம்பியிருக்கிறார்.

உறவினர்கள் ஓடி வந்து பார்த்தபோது கதவு வெளிபக்கமாக பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. அதுவே அவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்திருக்கிறது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிணமாக கிடந்திருக்கிறார் பெண்.

நீட் தேர்வுக்கு கட்டாயப்படுத்திய தாய்க்கு நேர்ந்த கதி -கராத்தே பெல்டால் கழுத்தை நெரித்து கொன்ற மகள்

கழுத்தில் கருத்து கராத்தே பெல்ட் சுற்றி கிடந்திருக்கிறது. தலையில் அடிபட்டு பின் மண்டையில் ரத்தம் கசிந்து வந்திருகிறது. போலீசார் வரவழைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பெண்ணின் தலையில் காயம் இருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு சிறுமியின் மீது சந்தேகம் இருந்தால் அவரை அழைத்து போலீசார் துருவி துருவி விசாரித்ததில் என்னை நீட் தேர்வுக்கு படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்தினர். நான் படிக்க முடியாது என்று சத்தம் போட்டேன். உடனே கத்தியை எடுத்து வந்து, படிக்காவிட்டால் குத்திக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார் அம்மா,.

நான் பயந்தேன். உண்மையிலேயே கொன்று விடுவாரோ என்று நினைத்து அவரை பிடித்து வேகமாக தள்ளி விட்டேன். அப்போது கட்டிலில் விழுந்த என் அம்மா தலையில் பலத்த அடிபட்டு கீழே விழுந்தார். உடனே நான் கராத்தே பெல்ட் எடுத்து வந்து அதை கழுத்தில் சுற்றி இறுக்கினேன். இதில் கழுத்து நெரிக்கப்பட்டு அவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து அம்மாவின் செல்போனில் இருந்து அப்பாவுக்கு போன் செய்து அப்பாவுக்கு நான் விடை பெறுகிறேன் என்று மெசேஜ் அனுப்பினேன். அடுத்து நானே அப்பாவுக்கு போன் செய்து அம்மா கதவை திறக்க மாட்டேங்கிறார் என்று சொன்னேன் என்று நடந்தவற்றையெல்லாம் சொல்ல போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.