உலக அன்னை உருவான கதை !

 

உலக அன்னை உருவான கதை !

ஆதிசக்திக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அவளுடைய பெயர்களாலே அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். அம்பிகையை வழிபடும் சக்தி வழிபாடான நவராத்திரியும், ஆடி மாதவழிபாடும் மிக பிரசித்தி பெற்றவை. சாந்த சொரூபினியான அம்பிகையினை லலிதா திரிபுரசுந்திரியாகவும், கெட்டதை அழித்து, நல்லதை நிலைநாட்டும் ‘காளி’யாகவும் என இருமுறைகளில் வழிபடுவர். அதில் ஆடி மாத ஆரம்பத்தினை தட்சணாயன புண்ய காலம் என்பர். அதாவது தேவர்களின் இரவு நேரம் என்பர் இக்காலத்தில் இறைவழிபாட்டிற்கே குறிப்பாக ‘லோக மாதாவான அன்னை’ வழிபாட்டிற்கே முக்கியத்துவம் கொடுப்பர்.

உலக அன்னை உருவான கதை !

அம்பிகையை கொண்டாடப்படும் காலங்களில் அபிஷேகங்கள் ஆராதனைகள், பூவால் அலங்காரங்கள், மாலை நேரங்களில் பாட்டு கச்சேரிகள் என நகரப்பகுதி, கிராமப்புறபகுதிகள் என திரும்பும் பக்கமெல்லாம் களை கட்டி நிற்கும். தமிழ்பாடல்கள், மகிஷா சூர மர்த்தினி ஸ்லோகங்கள், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் என அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப துதிகளை பாராயணம் செய்வர். இதில் மிக விசேஷமாக போற்றப்படும் ‘லலிதா சகஸ்ரநாமம்‘ என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது. நம்மை காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராக கருதப்படுபவர் ஸ்ரீ ஹயக்கிரீவர். குதிரை முகம் கொண்டவரும், கல்விக்கு அதிபதியானவரும் ஆவார். இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது.

உலக அன்னை உருவான கதை !

கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாகவே ஆதிசக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு “லலிதா” என்ற திருநாமம் சூட்டி, அவளது மகிமைகளையும் விளையாடல்களையும் விளக்கினார். மேலும், ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதமகா திரிபுர சுந்தரி இருப்பிடமான ஸ்ரீபுரத்தையும், அம்பிகையினை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையைப்பற்றிக் கூறுகின்றார்.

பஞ்சசடாஷ்சரி என ஒன்றுபடும் ஸ்ரீயந்த்ரம், ஸ்ரீவித்யா, லலிதாம்பிகா, ஸ்ரீகுரு மற்றும் தேவியை உபசரிக்கும், தேவியின் பணிகளைச் செய்யும் மற்ற தெய்வங்கள் தேவதைகளைப்பற்றி கூறுகின்றார். அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், “குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் கொஞ்சம் சொல்லுங்கள்!” என்றார்.

உலக அன்னை உருவான கதை !

“அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர பக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!” என்று கூறிய ஸ்ரீ ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார். இதிலிருந்து, லலிதா சகஸ்ரநாமத்தின் புனிதத்தன்மையை உணரலாம்.
பக்தியோடு மிக சக்திவாய்ந்த லலிதா சகஸ்ரநாமம் ஸ்லோகமாத்தை சொல்ல சொல்ல தீமைகள் நீங்கி, நன்மைகள் பன்மடங்கு பெருகும். நம்மை ஆட்டுவிக்கும் நோய்கள் அனைத்தும் நீங்கும். ‘லலிதா’ என்றால் ‘அழகு’ என்றும் பொருள்படும். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ‘ஸ்ரீ வித்யா’ எனப்படும். ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும்.உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ‘ஸ்ரீ’ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா. உலகமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தையும் ஒன்றே.

உலக அன்னை உருவான கதை !

லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, துறவற வாழ்க்கையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி வழிபடலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக்கொள்கிறாள். மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.

லோகமாதாவான ”லலிதாம்பிகை சிவ சக்தி ஒன்றாக இணைந்தவள்” லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவினையும் சாதி, மத, இன வேறுபாடின்றி உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.