எடப்பாடி கதை முடிந்து விட்டது; சசிகலா தலைமையில் அதிமுக : கார்த்தி சிதம்பரம் பகீர் பேட்டி!

எடப்பாடி கதை முடிந்து விட்டது; சசிகலா தலைமையில் அதிமுக : கார்த்தி சிதம்பரம் பகீர் பேட்டி!

விரைவில் அதிமுக சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும் என்று காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா பெரிதும் பேசுபொருளாக மாறினார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் சசிகலாவால் அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று பலரும் யூகித்தனர். ஆனால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறினார். அதிமுக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் , அந்த பழி தன் மீது விழுந்து விடும் அதனால் தேர்தலுக்கு பிறகு அதிமுகவை சசிகலா கைப்பற்றுவார்கள் என்று சொல்லப்பட்டது..

எடப்பாடி கதை முடிந்து விட்டது; சசிகலா தலைமையில் அதிமுக : கார்த்தி சிதம்பரம் பகீர் பேட்டி!

அந்த வகையில் சமீபத்தில் சசிகலா தொண்டர் ஒருவருடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் நான் விரைவில் கட்சியை மீட்பேன் என்று கூறியிருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா அதிமுகவில் இல்லை ; நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அவர் அறிவித்துவிட்டார். அமமுகவினருடன் தான் அவர் பேசி வருகிறார். சசிகலா கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி கதை முடிந்து விட்டது; சசிகலா தலைமையில் அதிமுக : கார்த்தி சிதம்பரம் பகீர் பேட்டி!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “அதிமுகவும் சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும். இது எனது அரசியல் ஆருடம். எடப்பாடி பழனிசாமி முதல்வரானது ஒரு சரித்திர விபத்து. அந்த கதை முடிந்துவிட்டது. மாநிலங்களில் ஒன்றியம் தான் இந்தியா. அதனால் மத்திய அரசை ஒன்றியம் என்று அழைப்பது தவறு இல்லை” என்றார்.