நாசிக்: குடிசைக்குள் குட்டிப்போட்ட சிறுத்தை ஒரு மாதத்துக்குப் பிறகு காட்டுக்கு சென்றது!

நாசிக்: குடிசைக்குள் குட்டிப்போட்ட சிறுத்தை ஒரு மாதத்துக்குப் பிறகு காட்டுக்கு சென்றது!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே குடிசைக்குள் குட்டிப்போட்ட சிறுத்தை ஒன்று, ஒரு மாதம் கழிந்த நிலையில் தன்னுடைய குட்டிகளை நேற்று தூக்கிக்கொண்டு காட்டுக்குள் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நாசிக்: குடிசைக்குள் குட்டிப்போட்ட சிறுத்தை ஒரு மாதத்துக்குப் பிறகு காட்டுக்கு சென்றது!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் இகத்புரி பகுதியில் காட்டுக்கு அருகே ஆளில்லா குடிசையில் ஒரு சிறுத்தை கடந்த மாதம் நான்கு குட்டிகளை ஈன்றது. அதன் வளர்ச்சியை மகாராஷ்டிரா மாநில வனத்துறையினர் வீடியோ காமிராக்கள் மூலம் கணிகாணித்து வந்தனர். குட்டிகள் நான்கும் ஆரோக்கியமாக உள்ளன

ஒரு மாதம் ஆன நிலையில் சிறுத்தை தன்னுடைய குட்டிகளை நேற்று காட்டுக்குள் உள்ள தன்னுடைய இருப்பிடத்துக்கு தூக்கிச் சென்றுவிட்டது.

நாசிக்: குடிசைக்குள் குட்டிப்போட்ட சிறுத்தை ஒரு மாதத்துக்குப் பிறகு காட்டுக்கு சென்றது!

ஒவ்வொறு குட்டியாக லாவகமாக கவ்விக் கொண்டு எடுத்துச் செல்லும் வீடியோவை மகாராஷ்டிர வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.