’சிறை கைதியின் ஆரோக்கியத்திற்கு அந்த மாநில அரசே பொறுப்பு’ – திருமுருகன் காந்தி

 

’சிறை கைதியின் ஆரோக்கியத்திற்கு அந்த மாநில அரசே பொறுப்பு’ – திருமுருகன் காந்தி

சிறையில் ஒரு கைதி இருக்கும்போது அவருக்கான உடல்நிலை ஆரோக்கியம் சீர்கேட்டால் யார் பொறுப்பு என்கின்ற மிக முக்கியமான கேள்வியை மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி எழுப்பி இருக்கிறார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருக்கும்போது திடீரென்று அவருக்கு உடல்நலக் பிரச்சனைகள் ஏற்பட்டது. நேற்று முதன்நாள் சிறைக்கு அருகே உள்ள சிவாஜி சாலையில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்தார்கள். அவரும் இயல்பு நிலைக்கு வந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், மீண்டும் நள்ளிரவு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலைக்கு உடல் நிலை மாற்றம் ஏற்பட்டது.

’சிறை கைதியின் ஆரோக்கியத்திற்கு அந்த மாநில அரசே பொறுப்பு’ – திருமுருகன் காந்தி

அதன் பின் நேற்று அவரை விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு பலவித பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று இரவு மருத்துவமனை வட்டாரம் ’சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது’ என்று சொன்னது. இப்போதைய நிலை நுரையீரல் தொற்று மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தனிமையில் அடைபட்டிருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்ற அடிப்படையான கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. அது பலவிதமான சந்தேகங்களை கிளப்பி உள்ளது. ஏனெனில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா சிறப்பு கவனம் செலுத்தி பார்த்துக் கொள்ளப்படும் கைதி. அவருடன் எளிதில் ஒருவர் பேசவோ சந்திக்கவோ முடியாத சூழலே அங்கு இருந்தது. ஊரடங்கு காலத்தில் பார்வையாளர்கள் கூட அவரை சந்திக்க முடியவில்லை. சந்திக்க நினைத்த உறவினர்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே பேசியிருக்கிறார்கள்.

’சிறை கைதியின் ஆரோக்கியத்திற்கு அந்த மாநில அரசே பொறுப்பு’ – திருமுருகன் காந்தி

இந்நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? சசிகலாவுக்கு மட்டும்தானா இல்லை அந்த சிறையில் உள்ள பலருக்கும் இருக்கிறது என்கின்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அது கடும் விவாதப் பொருளாக மாறி வந்திருக்கிறது. இதற்கு இன்னும் சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பாக யாரும் பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முக்கியமான பதிவை சமூக ஊடகத்தின் பதிவிட்டுள்ளார். அதில், “சிறையில் நடந்த சீர்கேடால் இன்றளவும் உடல் பாதிக்கப்பட்டவர்கள் தோழர்.வேல்முருகனும், நானும். சிறைவாசியின் பாதுகாப்பு, ஆரோக்கியத்திற்கு சிறை நிர்வாகமே பொறுப்பு. மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே சிறை இயங்குகிறது. மாநிலத்தை யார் இயக்குகிறார்கள் என்பதை வைத்தே சிறைவாசி பாதுகாப்பும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

’சிறை கைதியின் ஆரோக்கியத்திற்கு அந்த மாநில அரசே பொறுப்பு’ – திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி குறிப்பிட்டிருப்பது போல பன்ருட்டி வேல்முருகன் சிறை சென்று வந்த பிறகு உடல்நிலை பிரச்சனையால் அவதிப்பட்ட அவர் மட்டுமல்ல பாமகவின் முக்கிய பொறுப்பில் இருந்த காடுவெட்டி குரு சிறைக்கு சென்று வந்த பிறகு கடும் உடல்நிலை பிரச்சனையால் அவதிப்பட்டார். இன்னொரு உதாரணம் முகிலன். மதுரை சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த போது ’ஆயிரமாயிரம் கொசுக்கள் இருக்கும் அறையில் தன்னை அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக’ பத்திரிகையாளர் முன் சட்டையைக் கழற்றி ஆதாரமாக தன் உடலையே காட்டினார்.
இப்படி ஏராளமான உதாரணங்களை சொல்லிக் கொண்டே போக முடியும்.

ஒருவர் தண்டனை கைதி ஆகவோ அல்லது விசாரணை கைதியாகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவும் சிறைக்குள் வரும்போது அவரின் உடல்நலம் யாருடைய கண்காணிப்பில் இருக்கிறது என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. அதற்கு நிச்சயம் சிறைத்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். சிறைத்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஆகவே சசிகலாவின் உறவினர் பிரச்சனைக்கு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகமும் அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கர்நாடக மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று திருமுருகன் காந்தி மறைமுகமாக சொல்கிறார் என்று இதைப் புரிந்து கொள்ள முடியும்.