அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம் உத்தரவு!

அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சிகாலத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு முறையில் தாழ்த்தப் பட்டோரின் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவிப்பு வெளியானது.

அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதற்கான விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதில், “பட்டியலினத்தவர்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் பட்டியலின பிரிவினரிடையே உள்ஒதுக்கீடு வழங்கும் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு அருண் மிஸ்ரா அமர்வு மாற்றியது. வழக்கை விரைவாக விசாரிக்க 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உள்ளதாக அருண் மிஸ்ரா அமர்வு தெரிவித்துள்ளது.