Home இந்தியா இந்த மாதத்தில் தொடர்ந்து 2வது முறையாக டெபாசிட் வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ.

இந்த மாதத்தில் தொடர்ந்து 2வது முறையாக டெபாசிட் வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ.

ரிசர்வ் வங்கி அண்மையில் யாரும் எதிர்பாராத வண்ணம் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) முக்கிய கடனுக்கான வட்டியை 0.40 சதவீதம் குறைத்து 4 சதவீதமாக குறைத்தது. இதனையடுத்து ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), சில்லரை குறித்த கால டெபாசிட் மற்றும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பிக்சட் டெபாசிட் வட்டியை எஸ்.பி.ஐ. குறைத்துள்ளது.

வட்டி குறைப்பு

பாரத ஸ்டேட் வங்கி 7 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கும் குறைவான பல்வேறு முதிர்வு காலம் கொண்ட சில்லரை குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் குறைத்துள்ளது. உதாரணமாக 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான முதிர்வு கால சில்லரை குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 3.3 சதவீதத்திலிருந்து 2.9 சதவீதமாக குறைத்துள்ளது. அதேபோல் ஒராண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவான பல்வேறு முதிர்வு கால நிரந்தர (பிக்சட்) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதமும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கனா வட்டி விகிதத்தை 0.30 சதவீதமும் குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் மே 27ம் (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கி கிளை

ஸ்டேட் வங்கியின் பிக்சட் டெபாசிட் கணக்குகளில் பல கோடி மூத்த குடிமக்கள் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இந்த டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டி வருவாயை வைத்துதான் பல மூத்த குடிமக்கள் தங்களது காலத்தை தள்ளி வருகின்றனர். இந்நிலையில் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டியை எஸ்.பி.ஐ.. குறைத்து இருப்பது மூத்த குடிமக்களை பாதிக்கும்.

Most Popular

‘பல்லாவரம் மேம்பாலம் சரியில்லை’ புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் பற்றி வாகன ஓட்டிகள் புகார்!

நேற்று முதல்வர் திறந்து வைத்த பல்லாவரம் மேம்பாலம் சரியில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை பல்லாவரத்தில் சுமார் 82 கோடி செலவில் கட்டப்பட்ட...

மதிமுக பிரமுகர் வெட்டி கொலை! விருதுநகரில் பதற்றம்!

மதிமுகவின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் வசித்து வந்தவர் சிவா...

’யாரையும் புலன்விசாரணைக்கு உட்படுத்த தேவையில்லை!’-தற்கொலைக்கு முன்பு திருச்சி காவலர் எழுதிய கடிதம்

’’என்னுடையை தற்கொலை முடிவுக்கு நானும், எனக்குள் ஏற்பட்ட காரணம் தெரியாத மன அழுத்தங்களே காரணம். அதனால், நான் இறந்த பிறகு, என்னுடன் பணிபுரிந்தகளையோ, பணிபுரிகின்றவர்களையோ, நண்பர்களையோ, உறவினர்களையோ புலன்விசாரணைக்கு உட்படுத்த...

‘நயன்தாரா டீ, ஹன்சிகா போண்டா, தமன்னா வடை’.. இணையதளத்தில் ட்ரெண்டாகும் டீக்கடை!

மக்களின் கவனத்தை ஈர்க்க டீக்கடைக்காரர் வைத்த பேனர் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சோஷியல் மீடியாக்கள் புழக்கத்தில் வந்ததில் இருந்தே குழந்தைகளின் வீடியோக்கள், விலங்குகளின் சேட்டைகள்,...
Do NOT follow this link or you will be banned from the site!