அணில் ஓடிட்டு இருக்கும்… அண்ணாமலை அடித்த கமெண்ட்-அரங்கில் சிரிப்பலை

 

அணில் ஓடிட்டு இருக்கும்… அண்ணாமலை அடித்த கமெண்ட்-அரங்கில் சிரிப்பலை

மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங்கள் தொடர்பான தமிழ் கையேட்டினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.

அணில் ஓடிட்டு இருக்கும்… அண்ணாமலை அடித்த கமெண்ட்-அரங்கில் சிரிப்பலை

சென்னை கமலாலயம் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 38 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளன. ர் அவர்களை சந்தித்து அவர்களின் நிறை குறைகளை கேட்க இருக்கிறோம். வரும் 25ஆம் தேதி ஒரு நாள் முழுவதும் அந்த விவசாயிகளை பாஜகவினர் சந்தித்து அவர்களுடன் செலவிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதற்காக அந்த ஒரு நாளை ’உழவருடன் ஒரு நாள்’ என்று பாஜக அழைக்கிறது என்று தெரிவித்தார். அவர் மேலும், இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்துகொண்டு அவர்களுக்கு உதவுவதற்கு என்னென்ன செய்யலாம் என்று ஆலோசிக்கப்படும். தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி என்னென்ன செய்துள்ளார் என்ற விவரங்களும் அவர்களிடம் வழங்கப்படும். இந்த சந்திப்பின் வாயிலாக விவசாயிகளுடன் காலம் முழுவதும் நீடிக்க கூடிய ஒரு உறவு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.

அணில் ஓடிட்டு இருக்கும்… அண்ணாமலை அடித்த கமெண்ட்-அரங்கில் சிரிப்பலை

அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மின் தடை ஏற்பட்டது. அரங்கில் இருந்த விளக்குகள் அணைந்து விட்டது. இதனால் பேட்டியை நிறுத்திக்கொண்ட அண்ணாமலை, ’’அணில் ஓடிட்டு இருக்கும்..’’ என்று கமென்ட் அடித்தார். அப்போது அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

மின்சாரத்தடைக்கு அணில் தான் காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னதை, அண்ணாமலை சொன்னதால் கூட்ட அரங்கில் சிரிப்பலைகள் எழுந்தன.