எஸ்.பி.பிக்காக காத்திருந்த “ஆயிரம் நிலவே வா”

தனது முதல் பாடலான ஆயிரம் நிலவே வா பாடல் வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது குறித்து எஸ்.பி.பி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் கூறுகையில்,
கல்லூரியில் படித்துக் கொண்டே, சினிமாவில் பாட வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்த காலம். தெலுங்கில் ஒரு சில படங்களுக்கு பாடிவந்தார். 1969 ஆம் ஆண்டில் ஒருநாள் ஏவிஎம் ஸ்டூடியோவில் தெலுங்கு பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தார்.

அந்த காலத்தில் ஏவிம் ஸ்டூடியோ ரெக்கார்டிங் தியேட்டரில் ஏசி வசதிகள் கிடையாது. ஸ்டுடியோவில் வேறொரு படப்பிடிப்புக்காக வந்த எம்.ஜி.ஆர் சிறிது நேர ஓய்விற்காக அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். அப்போது தெலுங்கு டப்பிங் படத்திற்காக தமிழில் டி.எம்.சவுந்திரராஜன் பாடிய பாடலை தெலுங்கில் பாடிக்கொண்டிருக்கிறார் எஸ்.பி.பி. அந்த பாடல் எம்.ஜி.ஆரின் காதில் விழ, தனது உதவியாளரை அழைத்து, ஸ்டுடியோவில் அந்த பாடலை பாடிக்கொண்டிருப்பது யார் என விசாரித்துவர சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

பாலசுப்பிரமணியம் என்ற ஒரு கல்லூரி மாணவர் பாடிக்கொண்டிருக்கிறார் என எம்.ஜி.ஆரிடம் வந்து சொல்கிறார் அவரது உதவியாளர். இரண்டு, மூன்று நாட்கள் சென்றதும், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், எஸ்.பி.பி தங்கியிருந்த வீட்டருகே ஒரு கார் வந்து நிற்கிறது. அந்த காரிலிருந்து இறங்கி வந்தவர் எம்.ஜி.ஆரின் உதவியாளர் பத்மநாபன்.

‘எம்.ஜி.ஆரின் அடுத்த படத்தில் நீங்கள் ஒரு பாடலை பாட வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு விருப்பம் இருந்தால், நாளை காலை ராமாவரம் வீட்டிற்கு வர முடியுமா என கேட்டு வர சொன்னார்’ என பத்மநாபன் கூறியுள்ளார். தமிழில் அதுவரை 3 பாடல்களை மட்டுமே பாடியுள்ள தனக்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் தேடி வந்து வாய்ப்பு தந்ததை நம்ப முடியாத நிலையில் இருந்தார் எஸ்.பி.பி

அடுத்த நாள் காலை ராமவரம் தோட்டத்திலிருந்து எஸ்.பி.ஐ அழைத்து வர கார் வந்திருந்தது. அங்கு அவருக்காக படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, பாடகி சுசிலா, பாடலாசிரியர் புலவர் குழந்தை, எம்.ஜி.ஆர் என ஒரு குழுவே காத்திருந்தது. எம்.ஜி.ஆரின் அடுத்த படமான அடிமைப்பெண் படத்தில், எஸ்.பி.பி யை பாட வைப்பதற்காக அந்த குழு காத்திருந்தது.

அப்போது எஸ்.பி.பிக்கு தமிழில் படிக்க தெரியாது என்பதால் பாடல் வரிகளை தெலுங்கில் எழுதிக்கொண்டு பாடுகிறார். அந்த பாடல்தான் ஆயிரம் நிலவே வா. அன்று முழுவதும் ரிகர்சல் நடத்தது. 3 நாட்கள் கழித்து ரெக்கார்டிங் வைத்துக்கொள்ளலாம் என சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.

வீட்டிற்கு வந்தால், எஸ்.பி.பிக்கு கடும் காய்ச்சலாம். மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லியதால், மூன்றாம் நாளில் ரெக்கார்டிங்கு திட்டமிடபடி செல்ல முடியவில்லை. மிகப்பெரிய வாய்ப்பு இப்படி கைநழுவி போய் விட்டதே என்கிற எஸ்.பி.பிக்கு மன வருத்தம். அந்த பாடம் நிச்சயம் அதே தேதியில் பாடல் ரெக்கார்டிங் நடந்திருக்கும். எனக்கு பதில் வேறு யாரைவது வைத்து ரெக்கார்டிங்கை முடித்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டார். ஒரு மாதம் கழித்து மீண்டும் எஸ்.பி.பியைத் தேடி எம்.ஜி.ஆரின் உதவியாளர் வருகிறார். ” நாளை காலை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு வந்து எம்ஜிஆர் பார்க்க சொல்லி இருக்கிறார் என்கிறார்.

எம்.ஜி.ஆர் தனக்கு இரண்டாவதாக ஒரு வாய்ப்பளித்திருக்கிறார். இதை நிச்சயம் நழுவ விடக்கூடாது என நினைத்து மறுநாள் நேரமாகவே ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு போய் எஸ்.பி.பி காத்திருக்கிறார். அப்போது வந்த எம்.ஜி.ஆர், ஸ்டுடியோவிற்கு வருகிறார். ‘போய்ப் பாடுங்க’ என்கிறார்.

அங்கு போனால் அதே ‘ஆயிரம் நிலவே வா’ பாடல். பாடலை முடித்துவிட்டு ஸ்டுடியோவிற்கு வெளியே எம்.ஜி.ஆரை நோக்கி ஓடி வருகிறார்.

” சார் நீங்க எனக்கு ரெண்டாவது வாய்ப்பு கொடுக்குறீங்கன்னு நினைச்சேன். அதே பாடலை பாட திரும்பவும் வாய்ப்பு கொடுப்பீங்கன்னு நான் கனவிலும் நினைச்சதில்லை” என்கிறார்.

“நான் இந்த பாடலை உங்களுக்கு பதிலா வேற யாரையாவது பாட வச்சிருக்கலாம். ஆனால், ரிகர்சல் முடிந்ததும் உங்க கல்லூரி நண்பர்களிடம் போய், எம்.ஜி.ஆர் படத்துல நான் பாட்டு பாடுறேன்னு சொல்லி இருப்பீங்க. நாளைக்கு படம் ரிலீசாகும்போது அதை பார்க்கும் உங்க நண்பர்களுக்கு நீங்க பொய் சொன்னதுபோல ஆகிடும். அதைவிட முக்கியம் உங்களோட சினிமாத் துறை எதிர்காலமே இதோட முடிந்துவிடும். அதனாலதான் நீங்க சரியாகி வரும்வரை உங்களுக்காக பாடல் ரிக்கார்டிங்கை நிறுத்தி வைக்க சொன்னேன்” என்று கூறி இருக்கிறார் எம்.ஜி.ஆர். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருப்பார். காத்திருந்து பாடிய அந்த ”ஆயிரம் நிலவே வா” பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் காற்றில் பறந்தது.