தந்தையை கொடூரமாக கொன்ற மகன்!- சொத்துக்காக நடந்த பயங்கரம்

 

தந்தையை கொடூரமாக கொன்ற மகன்!- சொத்துக்காக நடந்த பயங்கரம்


சொத்து கொடுக்க மறுத்த தந்தையை மகனே ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது

உச்ச நீதிமன்றம் நீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை கூறியிருந்தது. தந்தையின் சொத்தில் மகனுக்கு மட்டும் அல்லாமல் மகள்களுக்கு சமபங்கு இருக்கிறது என்பதுதான் அந்த தீர்ப்பு. இதனை சில பெண்ணின் கணவன்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தந்தையிடம் தங்களுக்கு சேர வேண்டிய சொத்துகளை கேட்டு வருகின்றனர். இதனால், அவரது சகோதர்கள் பிரச்னை கிளப்பி வருகின்றனர். இந்த சொத்து பிரச்னை தற்போது கொலையில் முடிகிறது.

மதுரை தெற்குவாசலை சேர்ந்தவர் மணி. தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த மணி, 24 வயதுடைய இளம்பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். தற்போது, இந்த குடும்பத்தில் சொத்துகளை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள்தான் இந்த தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறால் சொத்துகளை கொடுக்க மணி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, சொத்து தராத தந்தையை கொலை செய்த முதல் மனைவி மகன் கார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மணியை கொல்ல கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். இவர்களை பார்த்தவுடன் மணி ஓட்டம் பிடித்துள்ளார். இதையடுத்து, தந்தையை ஓடஓட விரட்டியுள்ளார் கார்த்திகேயன். ஒரு கட்டத்தில் அவரால் ஓட முடியவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்ட கார்த்திகேயன், தனது நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொடூரமாக கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த கார்த்திகேயன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.