விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனையில் நுழைந்த பாம்பு : அச்சத்தில் பொதுமக்கள்!

விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனையில் நுழைந்த பாம்பு : அச்சத்தில் பொதுமக்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 944 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர்.

விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனையில் நுழைந்த பாம்பு : அச்சத்தில் பொதுமக்கள்!

இந்நிலையில் விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனை கொரோனா வார்டின் பின்புறம் முட்களும் புதர்களும் மண்டி உள்ளன. இங்கு பாம்பு போன்ற நச்சு உயிரினங்கள் இருக்கின்றன.

விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனையில் நுழைந்த பாம்பு : அச்சத்தில் பொதுமக்கள்!

அப்படி பாம்பு ஒன்று மருத்துவமனையில் நுழைய அது அடித்து கொல்லப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையின் உள்ளே சிகிச்சையில் இருக்கக்கூடிய நோயாளிகள் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொரோனா வார்டு பின்புறமுள்ள முட்களையும் புதர்களையும் அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.