மேற்கு வங்கத்தில் களமிறங்கும் சிவ சேனா… காங்கிரசுடன் கூட்டணி?

 

மேற்கு வங்கத்தில் களமிறங்கும் சிவ சேனா… காங்கிரசுடன் கூட்டணி?

மேற்கு வங்கத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக சிவ சேனா அறிவித்துள்ளது. அதேசமயம் காங்கிரசுடன் கூட்டணி வைக்குமா என்ற தகவல் தெரியவில்லை.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அம்மாநில அரசியல் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது. அதேசமயம் அம்மாநிலத்தில் தற்போது அதிரடி எழுச்சி கண்டுள்ள பா.ஜ.க. எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் களமிறங்கும் சிவ சேனா… காங்கிரசுடன் கூட்டணி?
காங்கிரஸ்

மறுபுறம் நாம சிங்கிளா போட்டியிட்டால் ஜெயிப்பதை உணர்ந்த இடதுசாரி கட்சிகளும், காங்கிரசும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி பீகாரில் 5 இடங்களில் வெற்றி பெற்ற தெம்பில் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்த சூழ்நிலையில் புதிய திருப்பமாக பா.ஜக.வின் முன்னாள் கூட்டணி கட்சியான சிவ சேனா மேற்கு வங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் களமிறங்கும் சிவ சேனா… காங்கிரசுடன் கூட்டணி?
காங்கிரஸ், சிவ சேனா,

சிவ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் இது குறித்து டிவிட்டரில், கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் ஆலோசனை செய்த பிறகு, மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் சிவ சேனா முடிவு செய்துள்ளது. விரைவில் நாங்கள் கொல்கத்தா சென்றடைவோம் என்று பதிவு செய்து இருந்தார். அதேசமயம் மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததுபோல் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் சிவ சேனா இணையுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்பது தெரியவில்லை.