‘பாலியல் வழக்கில்’ பீலா ராஜேஷ் கணவர்…. நீதிமன்றத்தில் சிபிசிஐடி சொன்ன முக்கிய தகவல்!!

‘பாலியல் வழக்கில்’ பீலா ராஜேஷ் கணவர்…. நீதிமன்றத்தில் சிபிசிஐடி சொன்ன முக்கிய தகவல்!!

சிறப்பு டிஜிபி மீதான பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8வாரத்திற்குள் முடிக்கப்படும் என்று சிபிசிஐடி கூறியுள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தமிழக டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் டிஜிபி ராஜேஷ் தாஸ் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இந்த விவகாரம் சிபிசிஐடி வசம் சென்ற நிலையில் 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷின் கணவர் தான் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்.

‘பாலியல் வழக்கில்’ பீலா ராஜேஷ் கணவர்…. நீதிமன்றத்தில் சிபிசிஐடி சொன்ன முக்கிய தகவல்!!

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக செயல்பட்டதற்கு பாராட்டுகள்; வழக்கு விசாரணையை முடிக்க இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார். அப்போது சிபிசிஐடி தரப்பிலோ, காவல் உயரதிகாரிகள் என இதுவரை 87 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு உள்ளது.

‘பாலியல் வழக்கில்’ பீலா ராஜேஷ் கணவர்…. நீதிமன்றத்தில் சிபிசிஐடி சொன்ன முக்கிய தகவல்!!

காவல் அதிகாரியின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யப்படுகிறது. இதன் ஆய்வு அறிக்கைக்கு காத்து இருக்கிறோம். இதனால் 8 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணை அறிக்கையை ஏப்ரல் 13 ஆம் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.