“அதிமுக ஆட்சியில் தேசத்துரோக வழக்கால் இன்னலுக்குள்ளான மக்கள்” – வாபஸ் பெற ரவிக்குமார் எம்பி முதல்வருக்கு கோரிக்கை!

 

“அதிமுக ஆட்சியில் தேசத்துரோக வழக்கால் இன்னலுக்குள்ளான மக்கள்” – வாபஸ் பெற ரவிக்குமார் எம்பி முதல்வருக்கு கோரிக்கை!

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட தேசத்துரோக வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் என ரவிக்குமார் எம்பி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அதிமுக ஆட்சியில் தேசத்துரோக வழக்கால் இன்னலுக்குள்ளான மக்கள்” – வாபஸ் பெற ரவிக்குமார் எம்பி முதல்வருக்கு கோரிக்கை!

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற்றுவந்த அதிமுக ஆட்சியின்போது பொதுமக்களின் கருத்துரிமை பெருமளவில் பறிக்கப்பட்டது. அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தவர்கள், தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியவர்கள் என ஏராளமானோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்கள். அதனால் அரசாங்கத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற தலைப்பில் அதிகமாஅன வழக்குகளைப் பதிவுசெய்த மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. அந்தப் பிரிவின் கீழ் 2017ஆம் ஆண்உ 1,802 வழக்குகளும் 2018ஆம் ஆண்டு 2,241 வழக்குகளும் 2019ஆம் ஆண்டு 1,311 வழக்குகளும் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Image

2010-2020க்கு இடையிலான 10 ஆண்டுகளில் ஐபிசி 124 ஏ பிரிவை அதிகலவில் பயன்படுத்திய மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. 2020 வரை 139 வழக்குகள் இப்பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டு பல்ல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவற்றில் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளே அதிகம். அங்கு 21 வழக்குகள் பதியப்பட்டு 8,956 பொதுமக்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பேர் இப்படி தேசத்துரோக வழக்குகளை எதிர்கொள்ளவில்லை.

Image

இன்று மூத்த ஊடகவியலாளர் வினோத் துவா மீது இமாச்சலப் பிரதேசத்தில் பதியப்பட்ட தேசத்துரோக வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்ததோடு, கேதார்நாத் சிங் vs பீகார் மாநில அரசு (1962) என்ற வழக்கில் அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பொதுமக்களுக்கு எதிராக அதிமுக அரசால் பதியப்பட்ட தேசத்துரோக வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்புக்கு முரணானவை. மனித உரிமைகள் மீது மதிப்பு கொண்ட தங்களது தலைமையிலான அரசு கடந்த 124 ஏ பிரிவின் கீழ் பதுயப்பட்ட வழக்குகள் அன்னைத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.