கொரோனா பணியில் உயிரிழக்கும் பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்படுவார்!

 

கொரோனா பணியில் உயிரிழக்கும் பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்படுவார்!

கொரோனா தடுப்புப் பணியில் பங்கேற்கும் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தால், அவர்கள் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

கொரோனா பணியில் உயிரிழக்கும் பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்படுவார்!தற்போது நாட்டின் சில பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணியில் போலீசாருடன் துணை ராணுவப் படை வீரர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன. இப்படி பணியில் ஈடுபட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. துணை ராணுவப் படை வீரர்கள் பலர் கொரோனாத் தொற்று காரணமாக அவதியுற்று வருகின்றனர்.

கொரோனா பணியில் உயிரிழக்கும் பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்படுவார்!
இந்த நிலையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழக்கும் துணை ராணுவப் படை வீரர்களுக்கு உதவி செய்ய சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, கொரோனாத் தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வீரர், வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்படுவார். அவர் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.15 லட்சம் நிதி உதவி செய்யப்படும். இறந்த வீரரின் குடும்பத்தினருக்கு பொது மக்கள் நிதி உதவி செய்யும் வகையில் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியிடப்படும். மேலும், புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட போது பொது மக்கள் வழங்கிய ரூ.250 கோடி நிதி உதவியில் கொஞ்சம் மீதி உள்ளது. அதைக் கொண்டு வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.