‘தமிழகத்தில் மீண்டும் லாக் டவுன்’!? : தலைமை செயலாளர் இன்று அவசர ஆலோசனை!!

 

‘தமிழகத்தில் மீண்டும் லாக் டவுன்’!? : தலைமை செயலாளர் இன்று அவசர ஆலோசனை!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா பரவல் பல உயிர்களை காவு வாங்கியுள்ளது.கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.பல்வேறு கட்டுப்பாட்டுகளால் கொரோனா படிப்படியாக குறைந்த நிலையில் மீண்டும் இந்தியா முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டன . அந்த வகையில் தமிழகத்திலும் இயல்பு நிலை திரும்பியது. இந்த சூழலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு 300க்கு குறைவானவர்களே குறைவால் பாதிக்கப்பட்டு வந்தனர் . ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 836 பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்து 572 ஆக உயர்ந்துள்ளது.

‘தமிழகத்தில் மீண்டும் லாக் டவுன்’!? : தலைமை செயலாளர் இன்று அவசர ஆலோசனை!!

அதேபோல் இதுவரை 12,551 கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையை பொருத்தவரையில் அதிகபட்சமாக 317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் செங்கல்பட்டில் 81 பேருக்கும் கோவையில் 70 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது.

‘தமிழகத்தில் மீண்டும் லாக் டவுன்’!? : தலைமை செயலாளர் இன்று அவசர ஆலோசனை!!

இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் காணொலியில் அவசர ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.இதன் மூலம் மீண்டும் கொரோனாவை தடுப்பது எப்படி? பொதுமுடக்கம் அமல்படுத்தலாமா? அல்லது வார இறுதி நாட்களில் ஊரடங்கு கொண்டுவருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.