தீபம் ஏற்றும் திரிகளில் உள்ள ரகசியம்!

 

தீபம் ஏற்றும் திரிகளில் உள்ள ரகசியம்!

இருளை நீக்கி ஒளியை தரும் தீபத்திற்கு பயன்படுத்தபடும் திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். விளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

தீபம் ஏற்றும் திரிகளில் உள்ள ரகசியம்!

பருத்திப் பஞ்சால் செய்யப்பட்ட திரியை போட்டு விளக்கேற்றி வந்தால், குடும்பத்தில், தரித்திரம் நீங்கி அதிர்ஷ்டம் பெருகும். குடும்பம் சிறக்கும். குடும்பத்தில் நற்செயல்கள் தொடர்ந்து நடக்கும்.
வாழைமர பட்டையை நிழலில் உலர்த்தி, காய வைத்து, நாம் ஏற்றும் தீபத்தில் திரியாக போட்டு விளக்கேற்றினால் நாம் நம்மை அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். நம் முன்னோர்களின் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.

தீபம் ஏற்றும் திரிகளில் உள்ள ரகசியம்!


தாமரை நார் திரி அதாவது தாமரை பூ தண்டை உலர்த்தி, காய வைத்து விளக்கில் திரியாக போட்டு ஏற்றி வர வாழ்வின் முன்வினைப் பாவங்கள் போக்கும். வீட்டில், நிலைத்த செல்வ கடாட்சத்தை பெருக்கும். வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால், செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும். பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.

தீபம் ஏற்றும் திரிகளில் உள்ள ரகசியம்!

புதிய மஞ்சள் துணியால் ஆன திரியை கொண்டு தீபமேற்றுவதால், துஷ்ட சக்திகளை விரட்டும் தூர்க்கா தேவியின் அருள் முழுமையாக கிடைப்பதோடு நோய்களை குணமாகும். புதிய சிவப்பு வண்ண பருத்தி துணியால் செய்த திரியை கொண்டு விளக்கேற்றுவதால், திருமண தடை, குழந்தையின்மை தொடர்பான தோஷங்களை நீக்கும். புதிய வெள்ளை துணியால் ஆன திரியை உபயோகித்தால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
துணியாலான திரியை பயன்படுத்தும் முன், துணியை பன்னீரில் ஊறவைத்து, பின்பு அதை உலர்த்தி அந்த துணியை சிறிய திரிகளாக மாற்றி வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றி வந்தால் லட்சுமி தேவியின் அருட்பார்வை நம்மீது விழும். மேலும் நமக்கு மன அமைதியை ஏற்படுத்தும்.

  • வித்யா ராஜா