கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது- சுகாதாரத்துறை அமைச்சர்

 

கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது- சுகாதாரத்துறை அமைச்சர்

கர்நாடகாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடக்கத்தில் இருப்பதால் பொதுமக்கள், பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. மேலும் தொடர்ந்து அதிகரித்து நம் நாட்டில் கொரோனா வைரஸின் 2வது அலை குறித்த பயத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 40,953 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. 188 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது- சுகாதாரத்துறை அமைச்சர்

இந்நிலையில் மருத்துவர்களுடனான ஆலோசனைக்குழுவுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, நிலைமையை எவ்வாறு கட்டுக்குள் வைப்பது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடக்கத்தில் இருப்பதால், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினைப் பராமரித்தல், கைகளைக் கழுவுதல் மற்றும் அவசியம் இல்லாமல் வெளியே செல்வத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளைக் கடைபிடிக்காமல் இருப்பதன் மூலமாக உண்டாகும் அபாயம் குறித்து பொதுமக்களையும் அம்மாநில மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.