சென்னையில் ‘இந்த பகுதிகளில்’ உச்சத்தில் கொரோனா : மாநகராட்சி எச்சரிக்கை!

 

சென்னையில் ‘இந்த பகுதிகளில்’ உச்சத்தில் கொரோனா : மாநகராட்சி எச்சரிக்கை!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது.

சென்னையில் ‘இந்த பகுதிகளில்’ உச்சத்தில் கொரோனா : மாநகராட்சி எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இநேற்று ஒரேநாளில் கொரோனாவால் 10986 பேர் பாதிக்கப்பட்டனர். சென்னையில் அதிகபட்சகமாக 3711 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் தமிழகத்தில் கொரேனாாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் நேற்றைய நிலவரப்படி, கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13,205 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ‘இந்த பகுதிகளில்’ உச்சத்தில் கொரோனா : மாநகராட்சி எச்சரிக்கை!

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் எதிரொலியாக சென்னையில் இரண்டு மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்திலும் 3,044 பேருக்கும் , அண்ணாநகர் மண்டலத்தில் 3041 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் தண்டையார்பேட்டை, ராயபுரம் ,திருவிக நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து தாண்டியுள்ளது, தண்டையார்பேட்டையில் 2,026 பேருக்கும் ,ராயபுரம் பகுதியில் 2,488 பேருக்கும், திருவிக நகரில் 2,741 பேருக்கும், அம்பத்தூரில் 1,985 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,305 பெருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதேபோல் மாதவரம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு ஆயிரத்தை எட்டியுள்ளது.