கேட்டது என்னவோ 35, ஆனா கொடுக்குறது …. திமுக கூட்டணியின் நிலை!?

 

கேட்டது என்னவோ 35, ஆனா கொடுக்குறது …. திமுக கூட்டணியின்  நிலை!?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய காட்சிகளாக பார்க்கக்கூடிய அதிமுக – திமுக கட்சிகள் இந்த தேர்தலிலும் நேருக்கு நேர் களம் காண்கின்றன. அவர்களுடன் கூட்டணி காட்சிகளாக தேசிய கட்சிகளும் களமிறங்கியுள்ளது.

கேட்டது என்னவோ 35, ஆனா கொடுக்குறது …. திமுக கூட்டணியின்  நிலை!?

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஒருகட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ள நிலையில் விசிக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்னும் எட்டப்படவில்லை. இந்நிலையில் திமுக – காங்கிரஸ் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.
ஏற்கனவே கடந்த 25ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி , கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்துகொண்டர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது என்றார். இருப்பினும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் 35 சீட்டுகள் கேட்டதாகவும், அதற்கு திமுக 18 என சொன்னதாகவும் தெரிகிறது. இதனால் தான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளது காங்கிரஸ்.

கேட்டது என்னவோ 35, ஆனா கொடுக்குறது …. திமுக கூட்டணியின்  நிலை!?

நாளை நடைபெறவுள்ள தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 20 முதல் 25 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.