சாத்தான்குளம் காவல்நிலையத்தை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்! – உயர் நீதிமன்றம் அதிரடி

 

சாத்தான்குளம் காவல்நிலையத்தை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்! – உயர் நீதிமன்றம் அதிரடி

விசாரணைக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வரும் நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்! – உயர் நீதிமன்றம் அதிரடிசாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த மரணத்துக்கு காரணமாக காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர்கள் இருவர் மீதும், மற்ற அதிகாரிகள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்! – உயர் நீதிமன்றம் அதிரடிஇந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நடத்தி வரும் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீசார் ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறை அலுவலகத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கையகப்படுத்தி, அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறைக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
முன்னதாக இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு அனுமதி கேட்டு முறையிட்டது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த நிலையில் நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.