இந்த திமுகவிற்கு இதே வேலையாகப் போய்விட்டது; செத்துப் போன தலைவருக்கு கோவில் பணத்திலிருந்து திவசம் கொடுப்பதா? எரிச்சலில் எச்.ராஜா

இந்த திமுகவிற்கு இதே வேலையாகப் போய்விட்டது; செத்துப் போன தலைவருக்கு கோவில் பணத்திலிருந்து திவசம் கொடுப்பதா? எரிச்சலில்  எச்.ராஜா

மறைந்த கருணாநிதிக்கு சென்னையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 39 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த திமுகவிற்கு இதே வேலையாகப் போய்விட்டது; செத்துப் போன தலைவருக்கு கோவில் பணத்திலிருந்து திவசம் கொடுப்பதா? எரிச்சலில்  எச்.ராஜா

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், அண்ணா நினைவு நாளில் இந்து கோவில்களில் சம போஜனம் செய்யவும் உத்தரவிட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

’’கருணாநிதி காலமாகி மூன்று வருடங்களாகி விட்டன. இந்த மூன்று வருட காலகட்டத்தில் திமுகவின் அறக்கட்டளையில் இருந்து கருணாநிதிக்கு நினைவிடம் கட்டி இருக்க வேண்டியதுதானே.. ஏன் கட்டவில்லை? இன்றைக்கு எதற்கு மக்கள் வரிப்பணத்தில் கட்டுகிறார்கள். இந்த திமுகவிற்கு இதே வேலையாகப் போய்விட்டது’’ என்று எரிச்சலாக சொல்கிறார்.

இந்த திமுகவிற்கு இதே வேலையாகப் போய்விட்டது; செத்துப் போன தலைவருக்கு கோவில் பணத்திலிருந்து திவசம் கொடுப்பதா? எரிச்சலில்  எச்.ராஜா

செத்துப்போன தங்கள் கட்சித் தலைவருக்கு திவசம் கொடுக்க கோவில் பணத்திலிருந்து எடுத்துக் கொடுப்பதா? என்றும் எச்.ராஜா ஆவேசப்பட்டிருக்கிறார். அண்ணா நினைவு நாளில் சமபந்தி போஜனம் ஏன் இந்து கோவிலில் செய்கிறாகள்.

சர்ச்சில் அதைச் செய், மசூதியில் அதைச் செய்.. ஆனால் ஏன் இந்து கோவில்களில் மட்டும் அண்ணாவுக்கு சம போஜனம் செய்கிறாய் ? சமபந்தி போஜனத்தினை நான் ஆதரிக்கிறேன். மக்கள் வாழ்க்கையில் அப்படி இருக்க வேண்டும். ஆனால் அதைஏன் இந்து கோவில்களில் மட்டும் செய்யவேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன். அதே மாதிரி மக்கள் பணத்தில் எதற்கு நினைவிடம் கட்டுகிறீர்கள் என்றுதான் கேட்கிறேன் என தனது பேச்சில் எரிச்சலை வெளிப்படுத்தி இருக்கிறார்.