Home உலகம் ரஷ்ய கொரொனா தடுப்பூசி - பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

ரஷ்ய கொரொனா தடுப்பூசி – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 24 லட்சத்து  41 ஆயிரத்து 738 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரத்து 020 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 88 ஆயிரத்து 196 பேர்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் V எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

ஆனபோதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தது. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் 5 பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.

 தடுப்பூசி

கடந்த சில வாரங்களுக்கு முன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஸ்புட்னிக் V மருந்தைக் கொண்டு வரும் முயற்சியில் ரஷ்யா மும்முரமாக இறங்கியது. ஸ்புட்னிக் V வின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் 40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் V மருந்தைச் செலுத்தும் பணியில் உள்ளது.

இப்போது தற்போது ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் விற்பனை வந்துவிட்டது ஸ்புட்னிக் V. இந்தத் தடுப்பூசியை முதல் கட்டமாக கொரோனா பணிகளில் பங்கேற்று வரும் முன்கள பணியாளர்களுக்கும், வயது முதியவர்களுக்கும் அளிக்க முடிவெடுத்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கட்டுமான நிறைவுச் சான்றின்றி மின் இணைப்பு தர சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. கோவையை சேர்ந்த நுகர்வோர் அமைப்பு தொடர்ந்த வழக்கில்...

நாகை, கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதால் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது....

அக்.26-இல் ராஜராஜ சோழனின் சதயவிழா; கொரோனாவால் நிகழ்ச்சிகள் ரத்து

தஞ்சாவூர் தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா வரும் 26ஆம் நடைபெறும் என விழாக்குழு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சதயவிழா...

‘நடிகர் ராஜசேகருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை’ : மருத்துவமனை தகவல்!

நடிகர் ராஜசேகர் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது...
Do NOT follow this link or you will be banned from the site!